Connect with us

ஒரே நாளில் 10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் – முழு விவரம்…

Featured

ஒரே நாளில் 10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதல்வர் – முழு விவரம்…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மட்டும் சுமார் 10,000 கோடி மதிப்பிலான தமிழக வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

முதல்வர் இன்று தொடங்கி வைத்த திட்டங்களின் முழு விவரங்களை காண்போம் :

7300.54 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்கள், ₹209 கோடி செலவில் 67 துணை மின் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட 69 மின் மாற்றிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

சென்னை சென்ட்ரல் பகுதியில் மத்திய சதுக்கத் திட்டத்தில் அரசு பொதுமருத்துவமனை அருகே 9.75 கோடி செலவில் கட்டப்பட்ட சுரங்க நடைபாதையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

வருவாய்த்துறை சார்பில் ₹12.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலக கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

இதையடுத்து மருத்துவத்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளின் கீழ் புதிய கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதுமட்டுமின்றி இனி வரும் நாட்களில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அரசு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா..? ‘அமரன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்..!!

More in Featured

To Top