Connect with us

வழக்கம்போல் அசத்திய மாணவிகள் – 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!

Featured

வழக்கம்போல் அசத்திய மாணவிகள் – 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..!!

தமிழ்நாட்டில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது .

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.55% ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,18,743 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் .

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.77% ஆகவும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90% ஆகவும் உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சிவகங்கையில் 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளது;

ராமநாதபுரத்தில் 96.36% மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது

மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்;

EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓடிடியில் வெளியானது ஜீவாவின் 'பிளாக்' திரைப்படம்..!!

More in Featured

To Top