Connect with us

புயல் எச்சரிக்கை : பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 144 ரயில் சேவைகள் ரத்து..!!

Featured

புயல் எச்சரிக்கை : பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 144 ரயில் சேவைகள் ரத்து..!!

வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜாம் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 144 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை தென்மேற்கு வங்கக் கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரப் கடற்கரையை அடைந்து டிச. 5-ம் தேதி முன் மதியம் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை(டிச.03) முதல் வரும் 7ஆம் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 144 ரயில்கள் புயல் எச்சரிக்கையை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், சென்னை சென்ட்ரல் விஜயவாடா அதிவிரைவு ரயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் ஹைதராபாத் எக்ஸ்பிரஸ், உட்பட 144 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தோனியுடன் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை - முன்னாள் கிரிக்கெட் வீரர் டேல் ஸ்டெய்ன் உருக்கம்..!!

More in Featured

To Top