Connect with us

“ஹீரோ, ஹீரோயின் ஏண்டா சேர்ந்தாங்கன்னு நினைக்க வைத்த காதல் படம்! 20 ஆண்டுகளை கடந்தும் நெஞ்சில் நிற்கும் இயற்கை திரைப்படம்!”

Cinema News

“ஹீரோ, ஹீரோயின் ஏண்டா சேர்ந்தாங்கன்னு நினைக்க வைத்த காதல் படம்! 20 ஆண்டுகளை கடந்தும் நெஞ்சில் நிற்கும் இயற்கை திரைப்படம்!”

இயக்குனர் எஸ் பி ஜெகநாதன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த காதல் திரைப்படம் தான் இயற்கை. ஷாம், குட்டி ராதிகா, அருண் விஜய் நடித்திருக்கும் இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வி ஆர் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய, வெண்ணிற இரவுகள் என்ற கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் இயற்கை. இப்படம், தேசிய அளவிலான தமிழ் திரைப்படத்திற்கான விருது பெற்றது.

முக்கோண காதல் தான் இத்திரைப்படம். மூவருக்கு இடையிலான காதல் இப்படத்தின் மையக் கரு. இராமேஸ்வரம் துறைமுகத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண்ணிற்கும், அவளை விரும்பும் இருவர் குறித்து இப்படத்தின் கதை நகரும். மருதுவாக நடித்த ஷாம் ஒர் அனாதையும். இவர் கப்பலில் வேலை செய்கிறார். இவரின் கப்பல் இராமேசுவரத்திற்கு வருகிறது. கடற்பயணத்தை முடித்துக் கொண்டு அங்கேயே தங்கி விடலாம் என கருதுகிறார் மருது.

அப்போது கப்பலில் உள்ளவர்களுக்கு பழம் பொருட்களை விற்பனை செய்யும் நான்சியாக நடித்த இராதிகா மீது மருதுவுக்கு காதல் மலர்கிறது. ஆனால், நான்சி, ஏற்கனவே அங்கு வந்திருந்த கப்பல் கேப்டன் அருண் விஜயை நினைத்தே வாழ்கிறார். அருண் விஜய் நான்சியை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்துவிட்டு கடலுக்கு செல்கிறார். அந்த நம்பிக்கையில் மருதுவை ஏற்க முடியாமல் தவிக்கிறார் நான்சி.

மருதுவை ஏற்பதா அருண் விஜய்க்கு காத்திருப்பதா என்ற குழப்பத்தில் இருந்த நான்சி வெகு நாட்கள் காத்திருந்தும் அருண் விஜய் வராததால் மருதுவை காதலை ஏற்றுகொள்ள முடிவு எடுக்கிறார். நான்சி கிறிஸ்துமஸ் அன்று தன் காதலை மருதுவிடம் சொல்ல திட்டமிடுவார். அன்றைய தினம் அருண் வருவார் அப்போது நான்சி என்ன முடிவெடுத்தார் என்பது தான் படத்தின் கதை. இப்படம் விமர்சன ரீதியிலும், வசூலிலும் குறை வைக்கவில்லை. இப்படத்தின் வாயிலாக, எஸ்.பி.ஜனநாதன் என்ற தரமான இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தார் என்றே சொல்லலாம்.

இப்படத்தின் வெற்றிக்கு இசையும் முக்கிய காரணம். இப்படத்தில் வசனங்களை விட இசைதான் நம்மிடம் பேசும். நன் உணர்வுகளை கட்டிப்போடும். அந்த அளவிற்கு இப்படத்தின் பாடல்கள் இருக்கும். குறிப்பாக காதல் வந்தால் சொல்லி அனுப்பு பாடல், இப்படத்தின் பிஜிஎம் அவ்வளவு அருமையாக அமைந்திருக்கும்.

”காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்…

என் கண்ணீர் வழியே உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்” 90ஸ்களில் காதல் தோல்வி நேரங்களில் இப்பாடல் இல்லாமல் இருக்காது. இப்படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு விஜய்தான் - விஷால் அதிரடி..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top