Connect with us

“இயக்குனர் பாலாவின் Masterpiece..! 24 ஆண்டுகளை கடந்தது சீயான் விக்ரமின் சேது படம்!”

Cinema News

“இயக்குனர் பாலாவின் Masterpiece..! 24 ஆண்டுகளை கடந்தது சீயான் விக்ரமின் சேது படம்!”

இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் இருவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்த படம், சேது. குறிப்பாக நடிகர் விக்ரமுக்கு வாழ்வு தந்த படம் என்று கூறுமளவுக்கு விக்ரமுக்கும் இந்தப்படம் மிகவும் முக்கியமான படம். அவரது சினிமா வாழ்க்கை சேதுவுக்கு முன், சேதுவுக்கு பின் என இரண்டு பாகங்களாக பிரிக்க முடியும். சேதுவுக்கு பின்னர் விக்ரமுக்கு நிறைய படவாய்ப்புகள் குவிந்தது. அது அவரின் திறமைக்கு தீனி போடுவதாக அமைந்தது.

அந்தளவுக்கு இந்தப்படத்தில் விக்ரம் தரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். விக்ரம், கல்லூரி மாணவர். கல்லூரியே அவரைக்கண்டு நடுங்குகிறது. கல்லூரியில் மாணவர் தலைவராகவும் இருக்கிறார். அவரை சியான் என்று அனைவரும் மரியாதையாக அழைக்கிறார்கள். தனக்கென ஒரு மாணவர் கூட்டத்துடன், கெத்தாக சுற்றிக்கொண்டிருக்கிறார். அப்போது கல்லூரி வரும் அபிதா மீது காதல் வயப்படுகிறார்.

அபிதாவின் தந்தை அந்தப்பகுதியில் உள்ள கோயில் குருக்கள், அபிதாவுக்கும், அவரது தாய் மாமாவுக்கும் திருமணம் செய்வதாக சிறு வயதிலே பேசி வைத்திருக்கிறார்கள். அபிதாவை, விக்ரம் துரத்தி, துரத்தி காதல் செய்கிறார். அபிதாவின் தாய்மாமாவே அவரிடம் விக்ரம்தான் அவருக்கு சரியானவர் எனக்கூற அபிதாவுக்கு விக்ரம் மீது காதல் தோன்றும். விக்ரமின் அண்ணனாக சிவக்குமார், நண்பர்கள் கூட்டத்தில் ஸ்ரீமனும் ஒருவர். கலகலப்பாக துவங்கிய படம், விக்ரம் காதலில் விழுந்தது முதல் சோகம் பூசிக்கொள்கிறது.

ஒரு கட்டத்தில் அபிதாவும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட வானத்தில் பறக்க துவங்குகிறார் விக்ரம். ஆனால், அந்த சந்தோசத்தை முழுதாக அனுபவிக்கும் முன்னே, தகராறில் ஒரு ரவுடி கும்பலால் அவர் கடுமையாக தாக்கப்படுவார். இதில் அவருக்கு தலையில் கடுமையாக அடிபட்டுவிடும். இதனால் வர் சுய நினைவை இழக்கிறார். பின்னர் மனநிலை பாதித்த அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு எதுவும் நினைவில் இல்லை. யாரையும் அடையாளமும் தெரியவில்லை.

அதற்கு பின் படம் முழுவதும் ஒரே கண்ணீர். ஒரு கட்டத்தில் தேறி வருகிறார். ஆனால் அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இதற்கிடையில் அபிதாவின் தந்தை அவருக்கும், அவரது தாய் மாமாவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அபிதாவின் திருமணம் நடக்குமா அல்லது விக்ரம் குணமாகி வந்து அபிதாவை சேர்வாரா என்பதுதான் மீதிக்கதை. எத்தனை முறை பார்த்தாலுமே கதறிக்கதறி அழத்தூண்டும் படம். வெளியானபோது சாதாரண படமாக வெளியாகி, இந்த கதை அழைத்து வந்த கூட்டம் திரையரங்கை நிரப்பியது.

See also  Break எடுத்த ஊழியரை பணி இடத்திலேயே சுட்டு கொன்ற சக ஊழியர் - அமெரிக்காவில் நடந்த பகீர் சம்பவம்..!!

அதற்குப்பின் இயக்குனர் பாலாவுக்கு பெரிய புகழ் கிடைத்தது. இளையராஜாவின் இசையில் எங்கே செல்லும் இந்தப்பாதை, கான கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா? மாலையின் வேதனை கூட்டுதடி, சிக்காத சிட்டொன்னு உள்ளிட்ட பாடல்கள் வைரலானது. குறிப்பாக எங்கே செல்லும் இந்தப்பாதை பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திற்காக விக்ரம், தனது உடல் எடை குறைத்து, தலை முடியை எடுத்து, மொட்டையடித்து என மெனக்கெட்டார். அதற்கான பலன் அவரது வாழ்க்கையையே மாற்றியது இந்தப்படம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top