Connect with us

இத்தனை நாட்களில் எடுக்க முடியுமா..? மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்த “2K லவ் ஸ்டோரி” படக்குழு..!!

Cinema News

இத்தனை நாட்களில் எடுக்க முடியுமா..? மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்த “2K லவ் ஸ்டோரி” படக்குழு..!!

பிரபல திரைபட இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான “2K லவ் ஸ்டோரி” திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட இயக்குநராக வலம் வருபவர் சுசீந்திரன் . வெண்ணிலா கபடி குழு , நான் மகான் அல்ல உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே 2K லவ் ஸ்டோரி.

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 38 நாட்களில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

City light pictures தயாரிப்பில் தரமாக உருவாகி உள்ள இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top