Connect with us

96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

Cinema News

96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

தமிழ் சினிமாவில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக மாறிய 96 படத்தின் 2ம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்துள்ள சுவாரஸ்ய தகவல் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் திரையரங்குகளில் சத்தமின்றி வெளியான திரைப்படமே 96 . சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி தீர்த்த இப்படம் அனைவரது வாழ்க்கையிலும் ரிலேட் செய்ய வகையில் எடுக்கப்பட்டிருக்கும்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி , திரிஷா நடிப்பில் உருவான இப்படம் காலம் கடந்து பேசும் வகையில் அனைவரும் மனதிலும் நீங்க இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என அனைவரும் ஆசைப்பட்ட நிலையில் தற்போது இயக்குநர் பிரேம்குமார் 2ஆம் பாகம் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

96 படத்தின் 2ம் பாகம் எடுக்க வேண்டும் என மிகப்பெரிய ஆசை உள்ளது. அதற்கான கதையையும் ஓரளவிற்கு எழுதிவிட்டேன். முதலில் வேண்டாம் என்றுதான் நினைத்தேன். பின்னர் எழுதிய பிறகு எனக்கே மிகவும் பிடித்துவிட்டது. ஆனால், இக்கதையை படமாக எடுக்க நான் மட்டும் மனது வைத்தால் போதாது என இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top