Connect with us

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!!

Featured

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 தொடரில் இன்று நடைபெறும் 4 ஆவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2- 1 என கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இதில் Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெறும் 4வது டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது .

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக செய்வதாக அறிவித்துள்ளார் . இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பிறகு விஜய்தான் - விஷால் அதிரடி..!!

More in Featured

To Top