Connect with us

5 Years of 2.O: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு படம்! திரையை கலக்கிய ரோப்போக்கள்!

Cinema News

5 Years of 2.O: தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு படம்! திரையை கலக்கிய ரோப்போக்கள்!

2.0, 3D சயின்ஸ் ஃபேன்டஸி ஆக்ஷன் திரைப்படம். இந்தப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இதற்கு மதன் கார்க்கியும், ஜெயமோனும் துணை புரிந்தனர். லைகா புரொக்ஷன்ஸின் சுபாஸ்கரன் தயாரித்திருந்தார். எந்திரன் படத்தொடரின் 2வது படம். இந்தப்படத்தில் 3 கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். சிட்டி, குட்டி, வசீகரன் என மூன்று வேடங்களில் ரஜினி கலக்கியிருப்பார். அக்ஷ்ய் குமார் பக்ஷிராஜனாக கலக்கியிருப்பார். ஏமி ஜாக்சன் நிலா ரோபோவாக நடித்திருப்பார்.

பாடல்களுக்கு AR ரஹ்மான் இசையமைத்திருப்பார். பாடல்களை நா. முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகியோர் எழுதியிருந்தனர். இந்தப்படத்தின் கதை, ஒரு காலத்தில் சிதைக்கப்பட்ட மனித உருவ ரோபோவான சிட்டி மற்றும் பறவைகளின் எண்ணிக்கை குறைவதைத் தடுக்க செல்போன் பயன்படுத்துபவர்களிடம் பழிவாங்கும் முன்னாள் பறவையியல் வல்லுநரான பக்ஷி ராஜன் ஆகியோருக்கு நடக்கும் மோதல் குறித்து இந்தப்படம் பேசுகிறது.

அதிக பணச்செலவில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம். 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை இந்தப்படத்தின் வேலைகள் நடந்தன. இந்தப்படம்தான் 3Dயில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம். இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. உலகம் முழுவதும் 3D தொழில்நுட்பம் மற்றும் வழக்கமான ஃபார்மட்டில் இரண்டிலும் 2018ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வெளியானது. இந்தப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் இந்தப்படம் குறித்த சில தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

பறவைக்காவலர் பக்ஷிராஜன் செல்போன் கோபுரங்களின் வரவால், பறவைகள் இறப்பதால், விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்வார். அவரின் ஆன்மா மற்றும் உயிரிழந்த பறவைகளின் ஆன்மாக்களுடன் சேர்ந்து செல்போன்களை ஒழிக்க அனைத்து செல்போன்களையும் பறித்துவிடுவார். அப்போது ஏற்கனவே இருந்த சிட்டியை களமிறக்கி, பக்ஷிராஜனை எதிர்த்து போராட விடுவார் வசீகரன், அந்த ரோபோ தோற்றுப்போகும்.

அப்போது வசிகரனின் உதவியாளர் நிலா ரோபோ சிட்டியை காப்பாற்றும். பின்னர் 2.0வாக சிட்டி மேம்படுத்தப்படுவார். மற்றொரு குட்டி ரோபோவும் உருவாக்கப்படும். அந்த பக்ஷிராஜன் அழிக்கப்படுவார். படத்தின் முடிவில் பறவைகளின் அவசியம் குறித்து சிட்டி வலியுறுத்துவார். எனவே தொழில்நுட்பம், இயற்கை இரண்டும் மனித வளர்ச்சிக்கு தேவை என்பதை படம உணர்த்தும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ பட ட்ரைலர் வெளியானது..!!

More in Cinema News

To Top