Connect with us

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 4 தேசிய விருதுகளை அள்ளிய ’பொன்னியின் செல்வன் 1’

Cinema News

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 4 தேசிய விருதுகளை அள்ளிய ’பொன்னியின் செல்வன் 1’

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன் 1’ படத்திற்கு 4 பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்துள்ளது .

இந்திய திரையுலகில் பல மொழி படங்களில் சிறந்து விளங்கும் படங்கள் நடிகர் நடிகைகள் உள்பட பல கேட்டகரிகளில் அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது நடப்பாண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .

70வது தேசிய திரைப்பட விருதுகள் :

சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1

சிறந்த கன்னட திரைப்படம் – கே.ஜி.எப் 2

சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளைக்கா

சிறந்த நடிகை – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்) – தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்” படத்தில் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு சிறந்த நடனத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . நடன இயக்குநர்கள் ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் தேசிய விருதை பெறவுள்ளனர்

சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – காந்தாரா

சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அன்பறிவ் (கே.ஜி.எப் 2)

உள்ளொழுக்கு’ படத்திற்காக நடிகை ஊர்வசிக்கு இந்தாண்டுக்கான கேரள திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டள்ளது . கேரள திரைப்பட விருதை அதிக முறை வாங்கியவர் (6) என்ற மோகன்லால், மம்மூட்டியின் சாதனையை ஊர்வசி சமன் செய்துள்ளார்.

சிறந்த திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு ஆகிய 4 பிரிவுகளில் தேசிய விருதுகளை தட்டித் தூக்கியது ‘பொன்னியின் செல்வன் 1

சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (படம் – பொன்னியின் செல்வன் -1) இது ரஹ்மானின் 7வது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  RCB-க்கு டைடில் அடுச்சு கொடுப்பதே எனது கனவு - பெங்களூர் அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி..!!

More in Cinema News

To Top