Connect with us

75 படகுகள் மூலம் எண்ணெய் படலம் அகற்றம் பணி தீவிரம் – மீனவர்கள் உதவியுடன் களத்தில் இறங்கிய சிபிசிஎல் ஊழியர்கள்..!!

Featured

75 படகுகள் மூலம் எண்ணெய் படலம் அகற்றம் பணி தீவிரம் – மீனவர்கள் உதவியுடன் களத்தில் இறங்கிய சிபிசிஎல் ஊழியர்கள்..!!

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் நிர்வாகமே காரணம் என பசுமை தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. அதிலும் குறிப்பாக சென்னை எண்ணூர், மணலி பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் .

கச்சா என்னை கசிந்துள்ள இப்பகுதிகள் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருவதால் இப்பகுதிகளை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்துள்ள சிபிசிஎல் நிறுவனம் கூறியதாவது :

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக 36 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையால் சுத்திகரிப்பு நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தது . வரலாறு காணாத இந்த வெள்ளத்தால் சுத்திகரிப்பு நிலையத்தின் அசுத்தமான கழிவுநீர் அமைப்புடன் வெள்ள நீர் கலந்தது.

எண்ணெய் படலத்தை மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அகற்றி வருகிறாராம் .எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.

75 படகுகள் மூலம் எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மீனவர்கள் உதவியுடன் சிபிசிஎல் நிறுவன ஊழியர்கள் கடல், ஆற்றில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றி வருகின்றனர் என சிபிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எமோஷனல் காட்சியில் அபாரம் காட்டிய கவின் - Bloody Beggar படக்குழுவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புகழாரம்..!!

More in Featured

To Top