Connect with us

தனுஷின் ராயன் படத்திற்கு A சான்றிதழ் – படத்தில் அப்போ இதுலாம் இருக்குமோ..?

Cinema News

தனுஷின் ராயன் படத்திற்கு A சான்றிதழ் – படத்தில் அப்போ இதுலாம் இருக்குமோ..?

தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘ராயன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தொடங்கி ஹாலிவுட் வரை தனது அசாத்திய திறமையை வெளிச்சம் போட்டு காட்டியவர் நடிகர் தனுஷ் .

உலகம் முழுதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார் .

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் ராயன் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் படத்தின் ரன்டைம் 145.12 நிமிடங்கள் உள்ளது எனவும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி இந்த படம் ஏராளமான ஆக்சன் காட்சிகளை கொண்ட ஒரு ganster படம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top