Connect with us

குஜராத்தில் 5 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி நீதிமன்றம் – போலி நீதிபதியை தட்டிதூக்கிய போலீசார்..!!

Featured

குஜராத்தில் 5 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி நீதிமன்றம் – போலி நீதிபதியை தட்டிதூக்கிய போலீசார்..!!

குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி வந்த போலி நீதிபதியை அம்மாநில போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

குஜராத்தின் முக்கிய நகர் பகுதியில் ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக் கோரி பாபுஜி அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு அவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் போலி நீதிபதி சாமுவேல்

இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன்மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

இதைத் தொடர்ந்து போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து, அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனுத்தாக்கல் செய்துள்ளார் . அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த உரிமையியல் நீதிமன்ற பதிவாளர் காவல்துறைக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இக்குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் போலி நீதிமன்றம் நடத்திய மோரிஸ் சாமுவேலின் சட்டவிரோத செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

நாட்டில் எது எதுவோ போலியாக நடந்து வந்த நிலையில் குஜராத்தில் ஒரு நீதிமன்றமே போலியாக செயல்பட்டு வந்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பியும் ஏற்படுத்தி உள்ளது.

நாட்டை பதறவைத்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட போலி நீதிபதியிடம் தற்போது மேற்படி விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை கௌதமி-க்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தலைமை..!!

More in Featured

To Top