Connect with us

ஆட்டத்தின் நடுவே பாலஸ்தீன கொடியுடன் கோலியை நோக்கி ஓடி வந்த நபரால் பரபரப்பு..!!

CWC23

ஆட்டத்தின் நடுவே பாலஸ்தீன கொடியுடன் கோலியை நோக்கி ஓடி வந்த நபரால் பரபரப்பு..!!

இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியின் நடுவே பாலஸ்தீன கொடியுடன் கோலியை நோக்கி ஓடி வந்த நபரால் மைதானமே சிறிது நேரம் பரப்பாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது . உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான ரசிகர்களுடன் இப்போட்டி விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார் . அதன்படி அஸ்சி அணிக்கு எதிராக கடினமான இலக்கை வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டியில் வழக்கம் போல் நல்ல தொடக்கத்தை கொடுத்த கேப்டன் ரோஹித் 47 ரன்களில் ஆட்டமிழக்க , கில்லும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் ஷ்ரேயஸ் ஐயரும் வந்த வேகத்தில் நடையை கட்டினார். நிலைத்து நின்று ஆடிய கோலி அரை சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்ததால் மைதானமே சிறிது நேரம் அமைதியானது.

இந்நிலையில், உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் பாலஸ்தீன கொடியுடன் ஒரு நபர் உள்ளே அத்துமீறி நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு இளைஞர் கையில் பாலஸ்தீன கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர் வீராட்கோலியின் அருகே சென்று அவரது தோளில் கையை போட்டார். உடனடியாக மைதானத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு வீரர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 10 போட்டிகளில் பேட்டிங்கில் அசத்தி வந்த இந்திய அணி இன்றைய போட்டியில் சற்று தொய்வுடன் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் ‘பெக்கர் வாலா’ பாடல் வெளியானது..!!

More in CWC23

To Top