Connect with us

சோதனைகள் கடந்த சாதனை படைத்த மாணவி கண்ணீருடன் வைத்த கோரிக்கை – முதல் ஆளாக உதவிய இயக்குநர் சேரன்..!!

Cinema News

சோதனைகள் கடந்த சாதனை படைத்த மாணவி கண்ணீருடன் வைத்த கோரிக்கை – முதல் ஆளாக உதவிய இயக்குநர் சேரன்..!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்த போது தந்தை இறந்த நேரத்திலும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதித்துக் காட்டிய மாணவிக்கு இயக்குனர் சேரன் செய்துள்ள மாபெரும் உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றது . 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதிய இந்த தேர்வின் முடிவு மே 6ஆம் தேதி வெளியானது .

வழக்கம் போல் இந்த முறையும் மாணவர்களை விட மனைவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருந்ததனார் . அதில சில மணாவிகள் பல சவால்களை கடனத்தை சாதித்தும் காட்டியுள்ளனர் .

அந்தவகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே தந்தையை இழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்கிற மாணவி, தந்தை இழந்த துக்கத்திலும் நன்றாக படித்து 487 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டபோது இத்தனை மதிப்பெண்கள் எடுத்தும் மேற்படிப்பு படிக்க எங்களிடம் வசதியில்லை, எங்கள் வீட்டில் கழிவறை கூட இல்லை என அந்த மாணவி கண்ணீருடன் பேட்டியளித்தது அனைவரையும் சோக கடலில் மூழ்கடித்தது .

மனைவியின் அந்த பேட்டியை கண்ட பலரும் மாணவிக்கு பல வகையில் உதவி செய்யும் நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான சேரன் அந்த மாணவிக்கு குளியலறையுடன் கூடிய கழிவறை கட்டிக்கொடுத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது :

அந்த தங்கைக்கு கழிவறை வசதியுடன் கூடிய குளிக்கும் அறை கட்டிக்கொடுக்கப்பட்டது.. அவர்களை தொடர்புகொண்டு இது நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த தம்பி விருமாண்டிக்கு (க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் ) நன்றி என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'கடைசி உலகப் போர்' படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!

More in Cinema News

To Top