Connect with us

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து – லெஜெண்ட் பட நடிகைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

Cinema News

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து – லெஜெண்ட் பட நடிகைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

படப்பிடிப்பின்போது போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் இருக்கும் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஊர்வசி. தமிழ் , ஹிந்தி , தெலுங்கு என பழமொழி படங்களில் நடித்து வரும் நடிகை ஊர்வசி கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான லெஜெண்ட் படத்தின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களின் அன்பையும் பெற்றார் .

இதையடுத்து தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தலா நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான சண்டைக் காட்சியை ஐதராபாத்தில் படமாக்கிய போது, நடிகை ஊர்வசி ரவுத்தலா விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயமும், எலும்பு முறிவு ம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மீண்டும் மீண்டுமா - புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்…!!

More in Cinema News

To Top