Connect with us

‘சர்தார்-2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்..!!

Cinema News

‘சர்தார்-2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்..!!

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்-2’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் . பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது. மாபெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் குறித்த விவரங்கள் ஒவ்வென்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது படக்குழுக்கு பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது.

சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது படப்பிடிப்பு தலத்தில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாகவும் இதில் ஒரு சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ளதாவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

மேலிருந்து கீழே விழுந்ததில், ஏழுமலையின் மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .

பூஜை போட்டு படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் கவனக்குறைவால் ஏற்பட்ட இந்த விபத்து படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வசூல் வேட்டையாடும் தலைவரின் வேட்டையன் திரைப்படம் - வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு..!!

More in Cinema News

To Top