Connect with us

மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை தாறுமாறாக பாராட்டிய நடிகர் தனுஷ்.!!

Cinema News

மாரி செல்வராஜின் ‘வாழை’ படத்தை தாறுமாறாக பாராட்டிய நடிகர் தனுஷ்.!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வாழை திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரை நட்சத்திரங்கள் மற்றும் ஊடகதினருக்கு திரையிடப்பட்ட நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் நடிகர் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் மாமன்னன் .இப்படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே வாழை .

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினருக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது.

இந்நிலையில் மாரி செல்வராஜின் அழைப்பை ஏற்று வாழை படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த நடிகர் தனுஷ் இப்படம் குறித்து போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

தனுஷ் போட்டுள்ள அந்த பதிவில் கூறிருப்பதாவது :

சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள். உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் அழகான படைப்பு ‘வாழை’. இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போதைப் பொருள் கடத்தலுக்கு துணைப்போகும் அரசு அதிகாரிகள் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

More in Cinema News

To Top