Connect with us

சொந்த ஊரில் ராயன் – குலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த நடிகர் தனுஷ்..!!

Cinema News

சொந்த ஊரில் ராயன் – குலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்த நடிகர் தனுஷ்..!!

நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தனது குடும்பத்துடன் நடிகர் தனுஷ் குலதெய்வ கோவிலுக்கு வழிபட்டுள்ள வீடியோ இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் நடிகர் , இயக்குநர் , பாடகர் , பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் .

எண்ணற்ற ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள தனுஷ் தனது 50 ஆவது படத்தை தானே இயக்க வேண்டும் என முடிவு செய்து ராயன் என்ற படத்தையும் இயக்கி நடித்துள்ளார் .

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தரமாக உருவாகி உள்ள இப்படம் வரும் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

இந்நிலையில் தேனியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்துள்ளார். தாய் , தந்தை , குழந்தைகள் , அண்ணா என குடும்பத்துடன் தனுஷ் வழிபாடு செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்வியால் செய்தியாளர்களுடன் மல்லுக்கட்டிய நடிகர் ஜீவா..!!

More in Cinema News

To Top