Connect with us

பரபரப்பான ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது தனுஷின் ராயன் பட ட்ரைலர்..!!

Cinema News

பரபரப்பான ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது தனுஷின் ராயன் பட ட்ரைலர்..!!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் ,மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் . நடிகர் , இயக்குநர் , பாடகர் , பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இவருக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

இந்நிலையில் தனது 50 ஆவது படத்தை தானே இயக்க வேண்டும் என தரமான கதையை உருவாக்கி பார்த்து பார்த்து இயக்கி உள்ளார் நடிகர் தனுஷ் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

செல்வராகவன் வசனத்தில் ஆரம்பம் முதல் அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த ட்ரைலரை பார்க்கும் போது படம் நிச்சம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்று தான் தோன்றுகிறது .

இதோ இந்த ட்ரைலரை பார்த்து உங்களுக்கு என தோன்றுகிறதோ அதை கமெண்டில் எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!

More in Cinema News

To Top