Connect with us

‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன் – வைரல் பதிவு..!!

Cinema News

‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன் – வைரல் பதிவு..!!

சூரியின் நடிப்பில் உருவாகி உள்ள கொட்டுக்காளி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியதுடன் பாராட்டு மடலையும் வெளியிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பல சர்வதேச விருதுகளை பெற்ற கூழாங்கல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே கொட்டுக்காளி .

எஸ்.கே புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் சூரியுடன் கேரளா நடிகை அண்ணா பென் உள்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 23 ஆம் தேதி திரையரங்குள் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி பாராட்டு மடலையும் வெளியிட்டுள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளை பெற்றது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் போற்றும் அளவுக்கு இப்படம் தரமாக உருவாகி இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிக்கரால் மத்தியில் ஏகபோகமாக எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொடர்ந்து சரியும் கச்சா எண்ணெய் விலை - பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அன்புமணி வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top