Connect with us

திடீர் உடல்நலக்குறைவால் நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி..!!

Cinema News

திடீர் உடல்நலக்குறைவால் நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி..!!

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திடீர் உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள திரையுலகில் இருக்கும் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால்.மலையாளம் , தமிழ் என பல மொழி படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் மோகன்லால் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலிலும் இடப்பிடித்துள்ளார்.

இந்நிலையில் பாரோஸ் மற்றும் எல்360 படங்களில் நடித்து வரும் நடிகர் மோகன் லால் மூச்சு திணறல் பிரச்சனையால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோகன்லால் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அதிகளவு காய்ச்சல் மற்றும் தசை வலி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு வைரல் தொற்றும் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர் .

இந்நிலையில் நடிகர் மோகன்லால் விரைவில் பூரண நலம்பெற்று வீடுதிரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top