Connect with us

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம் – அவரே போட்ட வீடியோ பதிவு..!!

Cinema News

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம் – அவரே போட்ட வீடியோ பதிவு..!!

நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக அவரே மகிச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நெப்போலியன் . எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் தற்போது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.

என்னதான் அமெரிக்காவிற்கு சென்றாலும் அங்கும் தமிழ் பாரம்பரியத்தை கடைபிடித்து விவசாயம் செய்து வருகிறார் . இதுமட்டுமின்றி அங்கு IT நிறுவனங்களையும் நெப்போலியன் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ்க்கு திருமணம் நடைபெற உள்ளதாக அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள நெப்போலியன் கூறியதாவது :

அன்புள்ள நண்பர்களே, தமிழ்ச் சொந்தங்களே, ஜூலை 2ஆம் நாள் நேற்று காலையில் எனது சகோதரர்களுடன் சென்று, நமது முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்து எனது மூத்த மகன் தனுஷ்க்கும் அக்‌ஷயா என்கிற பெண்னுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கி வாழ்த்துக்களை பெற்ற மகிழ்வான தருணம் என நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/C88tf8GSbyk/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போதைப் பொருள் கடத்தலுக்கு துணைப்போகும் அரசு அதிகாரிகள் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!!

More in Cinema News

To Top