Connect with us

இதய பிரச்னை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Cinema News

இதய பிரச்னை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

இதய பிரச்னை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி இவரது நடிப்பில் உருவான வேட்டையின் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதய பிரச்னை காரணமாக சென்னியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்திற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கத்தை, அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறையில் வெற்றிகரமாக சரி செய்துள்ளதாகவும் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதுமட்டுமின்றி 2 நாட்கள் சிகிச்சைக்கு பின் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சென்னையை துவைத்தெடுக்கும் கனமழை - சூப்பர்ஸ்டார் வீட்டில் ஏற்பட்ட பாதிப்பு..!!

More in Cinema News

To Top