Connect with us

‘மகாராஜா’ படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

‘மகாராஜா’ படத்தின் இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த் – வைரல் போட்டோஸ்..!!

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற மகாராஜா திரைப்படத்தை பார்த்திவிட்டு அப்படத்தின் இயக்குநரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பாராட்டி உள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவான மகாராஜா திரைப்படம் கடந்த ஜூன் மாதம் உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் சத்தமின்றி வெளியாகி மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

நித்திலன் இயக்கத்தில் பொறுமையாக செதுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த இப்படம் OTT தளத்திலும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் தற்போது படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல் அப்படத்தின் இயக்குநர் நித்திலனை நேரில் அழைத்து மனதார பாராட்டி உள்ளார் .

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள இயக்குநர் நித்திலன் நேரில் அழைத்து பாராட்டியதற்கு சூப்பர் ஸ்டார் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிவையும் போட்டுள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவில் நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள் - லிஸ்ட் இதோ…!!

More in Cinema News

To Top