Connect with us

‘அமரன்’ படத்திற்கான டப்பிங் பணியில் நடிகர் சிவகார்த்திகேயன் – ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட படக்குழு..!!

Cinema News

‘அமரன்’ படத்திற்கான டப்பிங் பணியில் நடிகர் சிவகார்த்திகேயன் – ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட படக்குழு..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அமரன் திரைப்படம் வெளியாக இன்னும் சரியாக 50 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது எஸ்.கே இப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபடும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படமே அமரன்.

தமிழ் சினிமாவின் குடும்ப நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் .

காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் மிடுக்கான ராணுவ வீரராக நம்ப எஸ்.கே நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ள நிலையில் தற்போது எஸ்.கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்காக கடின உழைப்பை போட்டு நடந்திருக்கும் நம்ப சிவகார்த்திகேயன் நரம்பு புடைக்க டப்பிங் பணியில் ஈடுபடும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதர் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு - போட்டோவுடன் அறிவித்த படக்குழு..!!

More in Cinema News

To Top