Connect with us

நகுல் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாஸ்கோடகாமா’ படத்தின் முதல் சிங்கள் பாடலை வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

Cinema News

நகுல் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாஸ்கோடகாமா’ படத்தின் முதல் சிங்கள் பாடலை வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

நகுல் நடித்துள்ள ‘வாஸ்கோடகாமா’ படத்தின் முதல் சிங்கிளான My Life My Rules என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தான் நகுல் . ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நகுல் இன்று தனது கடின உழைப்பால் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் வாஸ்கோடகாமா . RGK இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நகுலுடன் கே.எஸ்.ரவிக்குமார் , ஆர்த்தனா பிந்து , மன்சூர் அலிகான் , ஆனந்தராஜ் , முனீஸ்காந்த் , ரெடின் கிங்ஸ்லி , படவா கோபி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பில் தயாரான இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

My Life My Rules என தொடங்கும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளதுடன் வாஸ்கோடகாமா படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சார் படத்தின் புதிய ட்ரைலர் வெளியானது..!!

More in Cinema News

To Top