Connect with us

“சூர்யா வின் கங்குவா படத்தின் இந்த நடிகரும் வில்லனா?! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!”

Cinema News

“சூர்யா வின் கங்குவா படத்தின் இந்த நடிகரும் வில்லனா?! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!”

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற சூர்யா, தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் படம் தான் தியேட்டரில் வெளியானது. இந்தப் படமும் எதிர்பார்த்தளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், தற்போது உருவாகி வரும் கங்குவா படத்தை சூர்யா உட்பட அவரது ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.

இதுவரை பீரியட் ஜானர் படங்களில் நடித்தது இல்லை என்ற குறையை கங்குவா மூலம் சூர்யா தீர்த்துக்கொள்வார் எனத் தெரிகிறது. இந்தப் படம் 30 சதவீதம் மட்டுமே இப்போதைய காலக்கட்டத்தில் நடப்பதாக இருக்குமாம். மீதமுள்ள 70 சதவீதம் முழுக்க ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பக்கா பீரியட் ஜானரில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இதுவரை பார்க்காத விண்டேஜ் ஸ்டைல் சூர்யாவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அதேநேரம் சூர்யாவின் கேரக்டர் பற்றிய அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா ஹீரோவாகவும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கிடைத்துள்ள தகவலின் படி, சூர்யாவே நெகட்டிவ் ஷேடில் வில்லன் ரோலில் தான் நடித்துள்ளாராம். இது கொடூரமான நெகட்டிவ் ஷேட் கேரக்டர் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் கங்குவா படத்தில் ரொம்பவே வித்தியாசமான சூர்யாவை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், கங்குவா ஏப்ரலில் வெளியாகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், சூர்யா நடித்துள்ள சண்டைக் காட்சிகள் ஹை-ரிஸ்க் மோடில் ஷூட் செய்யப்பட்டுள்ளதாம். அதனால் ஆக்‌ஷன் சீன்ஸ் உட்பட படத்தின் 70 சதவீதம் பகுதிகள் கிராபிக்ஸ் செய்ய வேண்டி உள்ளதாம். எனவே இப்போதைக்கு கங்குவா ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டாம் என்பதில் படக்குழு உறுதியாக இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா 3டி, ஐமேக்ஸில் வெளியாகவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

More in Cinema News

To Top