Connect with us

“நடிகர் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படம் இதுதானா?! Latest தகவல்!”

Cinema News

“நடிகர் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படம் இதுதானா?! Latest தகவல்!”

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கங்குவா’. 38 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் 3D டெக்னாலஜியில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் வரலாற்று கால பகுதிகள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்கப்படாத அளவுக்கு இருக்கும் என்றும் அதேபோல் சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி 70% படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் மீதமுள்ள 30% படப்பிடிப்புகள் வரும் டிசம்பருக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் இரண்டாம் பாகத்துக்கு ஏற்றவாறு முடிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மொத்தத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ’கங்குவா’ திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Dhoom 4ல் நடிகர் சூர்யாவா..? வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top