Connect with us

‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

‘மகாராஜா’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் விஜய் – வைரல் போட்டோஸ்..!!

திரையரங்குகளில் மகாராஜா திரைப்படமே சக்கை போடு போட்ட நிலையில் படக்குழுவை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவான மகாராஜா கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் சத்தமின்றி வெளியாகி மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

நித்திலன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து தற்போது OTT தளத்திலும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் தற்போது படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மகாராஜா படக்குழுவை இன்று நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் தொகுப்பாளர் விஜய் சேதுபதி - வெளியானது புதிய ப்ரோமோ..!!

More in Cinema News

To Top