Connect with us

நடிகர் பிரசாந்த்திற்காக இப்படி ஒரு உதவியை செய்தாரா நடிகர் விஜய் – வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

நடிகர் பிரசாந்த்திற்காக இப்படி ஒரு உதவியை செய்தாரா நடிகர் விஜய் – வெளியான டக்கர் தகவல்..!!

நடிகர் பிரசாந்த்தின் ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகர் விஜய் சிறப்பான செய்கை ஒன்றை செய்துள்ளதாக அந்தகன் படக்குழு தெரிவித்துள்ளது.

90 காலகட்டத்தில் மக்களின் மனம் கவர்ந்த கலக்கல் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த் . பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர் திடீரென திரைப்படங்களில் முகம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் தற்போது தனது 2 வது இன்னிங்க்ஸை சிறப்பாக தொடங்கியுள்ளார்.

அந்தவகையில் இவரது நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படமே அந்தகன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வர உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் புரமோஷனிற்காக தளபதி விஜய் உதவ முன்வந்துள்ளார் .

அந்த வகையில், ’அந்தகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள அந்தகன் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24.07.24 அன்று வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  OTTயில் வெளியானது மாரி செல்வராஜின் வாழை திரைப்படம்..!!

More in Cinema News

To Top