Connect with us

நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் நிதியுதவி..!!

Cinema News

நாட்டை உலுக்கிய வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் நிதியுதவி..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் விக்ரம் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது .

இந்நிலையில் வயநாடு அருகே இன்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி நிதியுதவியும் தமிழக காங்கிரஸ் சார்பில் 1 கோடி நிதியுதவியும் வழங்கப்பட்டது . இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக நடிகர் விக்ரம் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளி பண்டியையை ஒட்டி நாளை ஒரே நாளில் 4 படங்கள் ரிலீஸ்..!!

More in Cinema News

To Top