Connect with us

கால எடுக்கணும்னு சொல்லிட்டாங்க கிறுக்கன் மாதிரி சுத்திட்டு இருந்தேன் – கடந்த காலம் குறித்து நடிகர் விக்ரம் எமோஷனல் டாக்..!!

Cinema News

கால எடுக்கணும்னு சொல்லிட்டாங்க கிறுக்கன் மாதிரி சுத்திட்டு இருந்தேன் – கடந்த காலம் குறித்து நடிகர் விக்ரம் எமோஷனல் டாக்..!!

சினிமாவில் நுழைந்த நேரத்தில் ஏற்பட்ட கசப்பான தருணங்கள் குறித்து தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சீயான் விக்ரம் பேசியிருப்பது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

சீயான் விக்ரம் நடிப்பில் ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படமே தங்கலான் . விறுவிறுப்பாக உருவான இப்படம் வரும் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சீயான் விக்ரம் கூறியதாவது :

தங்கலான் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படமாக இருக்கும் இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றி . தங்கலான் படத்தை ஒப்புக்கொண்டதற்கு காரணம் எனக்கும் , தங்கலான் கதாப்பாத்திரத்திற்கும் ஒற்றுமை இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை என்னால் உணர முடிந்தது.

எனது திரை வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில் சின்னதோ பெரிதோ எதோ ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என வெறி இருந்தது . இப்படி இருக்கும் சூழலில் நான் கல்லூரி படிக்கும் போது ஒரு நாள் விபத்தில் சிக்கிக் கொண்டேன், என்னுடைய கால் உடைந்தது.

அந்த நேரத்தில் எனக்கு 23 அறுவை சிகிச்சை நடந்தது . மருத்துவர்கள் என்னால் எழுந்து நடக்கவே முடியாது எனது காலை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் , கனவும் மட்டும் எனக்கு இருந்தது.

வாய்ப்பு கிடைத்தால் சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்திட மாட்டோமா என்று ஏங்கினேன். இந்த போராட்டத்திலேயே 10 வருடங்கள் கழிந்தது. நடக்கவே முடியாது என்று சொன்னவர்கள் முன் என்னால் நடக்க முடிந்தது.

அனைவரும் நடிப்பு வரவில்லை வேறு வேலை பாரு என்று சொன்னார்கள். ஆனால் என்னை நானே தேர்த்திக் கொண்டு நடித்தேன். அன்று நான் விட்டு இருந்தால் இன்று உங்கள் முன் நின்று பேசி இருக்க முடியாது என நடிகர் விக்ரம் எமோஷனலாக பேச அவரது பேச்சை கேட்டு அரங்கிமே எமோஷனலாகி கைதட்டும் விசிலும் பறந்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ப்ரீ புக்கிங்கில் பட்டய கிளப்பும் புஷ்பா2 - இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா..?

More in Cinema News

To Top