Connect with us

யாஷ் 19 படத்தின் டைட்டில் என்னவா இருக்கும்?! நாளை வெளியாகவிருக்கும் அறிவிப்பு!

Cinema News

யாஷ் 19 படத்தின் டைட்டில் என்னவா இருக்கும்?! நாளை வெளியாகவிருக்கும் அறிவிப்பு!

KGF, KGF 2 ஆகிய படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளார் நடிகர் யாஷ். முன்னதாக கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படங்கள் யாஷிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன. இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த இந்தப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியான நிலையில் பான் இந்தியா ஸ்டாராகவும் உயர்ந்துள்ளார் யாஷ். குறிப்பாக KGF 2 படம் மிகப்பெரிய வசூலை பெற்றது.

இந்நிலையில் யாஷின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து ரசிகர்களிடையே இருந்து வந்தது. KGF படங்களின் வெற்றியை தன்னுடைய அடுத்தப்படத்திலும் நீட்டிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த யாஷ், அடுத்தப்படத்திற்காக அதிகமான இயக்குநர்களிடம் கடந்த சில மாதங்களாக கதை கேட்டு வந்தார். ஹாலிவுட் இயக்குநருடன் அவர் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது Yash 19 படம் உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல மலையாளப்பட இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார்.

படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியாகவுள்ளதாக யாஷ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக 3 நாயகிகள் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் மூவரும் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாளைய தினம் படத்தின் அறிவிப்புடன் நாயகிகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெவிக்கின்றன.

ஆக்ஷன் திரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தில் மீண்டும் கேங்ஸடராக யாஷ் நடிக்கிறார் என்றும் தகவல்கள் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் 2025ல் ரிலீசாக திட்டமிடப்பட்டுள்ளது. நாளைய தினம் Title வெளியாகவுள்ள நிலையில் KGF டைட்டிலை போல இந்தப் படத்தின் டைட்டிலும் ரசிகர்களை கவருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ’எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு - வேதனையுடன் அறிவித்த கங்கனா..!!

More in Cinema News

To Top