Connect with us

தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் நடிகை எமி ஜாக்சன்..!!

Cinema News

தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார் நடிகை எமி ஜாக்சன்..!!

ஹாலிவுட் மற்றும் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை எமி ஜாக்சன் தனது நீண்ட நாள் காதலனை இன்று கரம் பிடித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதையின் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை எமி ஜாக்சன்.

முதல் படத்தில் கிடைத்த அட்டகாச அங்கீகாரத்தின் மூலம் ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பன்மொழி படங்களில் நடித்து திரையுலகை கலக்கி வந்தார் .

திரையுலகில் பிரபலமாக இருந்தபோது ஆன்ட்ரூஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 2019ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தைக்கு எமி ஜாக்சன் தாயானார் . இதையடுத்து காதலன் ஆன்ட்ரூஸ் உடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் ஆன்ட்ரூஸ் உடனான உறவை எமி முறித்து கொண்ட எமி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வந்தார் .

இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று இருவரது குடும்பத்தினரும் நண்பர்களும் புடை சூழ இவர்களது திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று முடித்துள்ளது .

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூர்யா விஜய்சேதுபதி நடிக்கும் Phoenix வீழான் படத்தின் ‘யாரான்ட’ பாடல் வெளியீடு..!!

More in Cinema News

To Top