Connect with us

என்னங்க இப்படி சொல்லிடீங்க : இந்தியன் 2வை மோசமாக விமர்சித்த நடிகை ரச்சிதா..!!

Cinema News

என்னங்க இப்படி சொல்லிடீங்க : இந்தியன் 2வை மோசமாக விமர்சித்த நடிகை ரச்சிதா..!!

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்று வரும் நிலையில் பிரபல நடிகை ஒருவர் இப்படத்தை மோசமாக விமர்சித்துள்ளது சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது .

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் சுமார் 28 வருடங்களுக்கு பின் உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2 இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது .

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று கோலாகலமாக வெளியானது.

இந்த நிலையில் இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் கொஞ்சம் ஏமாற்றம் தான் என ரசிகர்கள் கருத்து கூறி வரும் நிலையில் தற்போது இப்படம் குறித்து நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி போட்டிருக்கும் பதிவு செம வைரல் ஆகி வருகிறது.

இந்தியன் 2 படம் பார்த்த ரச்சிதா நான் அதிகம் ஏமாற்றம் அடைந்ததாக கூறி இருக்கிறார். இதற்கு இந்தியன் படத்தை ரீரிலீஸ் செய்திருக்கலாம் என ரச்சிதா கூறியுள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என் வாக்கு பலிக்கும்…2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி

More in Cinema News

To Top