Connect with us

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது..!!

Cinema News

போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது..!!

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக பிரபல தென்னிந்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். பல மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் கைகோர்த்து நடித்து வரும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ஒட்டுமொத்த குடும்பமே மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கின் குடும்பத்தில் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரின் சோதனையில் 199 கிராம் கொக்கைனுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியவர்கள் பட்டியலில் அமன் பெயரும் இருந்துள்ளது.

இதையடுத்து அவருக்கு போதைப்பொருள் சோதனை நடத்தியதில் அமன் கொக்கைன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ வீடியோ பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top