Connect with us

“ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘The Girl Friend’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது!”

Cinema News

“ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘The Girl Friend’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது!”

இந்தி, தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்து புஷ்பா 2, ரெயின்போ படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள இந்தி படமான ‘Animal’ கடந்த 1-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

இதன் புரமோஷன்களில் கடந்த ஒரு மாதமாகக் கலந்து கொண்ட ராஷ்மிகா, இப்போது ‘The Girl Friend’ படத்தின் படப்பிடிப்புக்குச் சென்றுள்ளார்.

இதுபற்றி அவர், “மும்பையில் இருந்து ஹைதராபாத் செல்கிறேன். 5ம் தேதி முதல் ‘The Girl Friend’ படத்தின் ஷூட்டிங். அடுத்த 20 நாட்கள் அங்கு இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ‘The Girl Friend’ படத்தை நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார்.

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. வித்யா, தீரஜ் மொகிலினேனி தயாரிக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்த ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Cinema News

To Top