Connect with us

“தன்னை விட 22 வயது குறைந்த நடிகையுடன் நடிக்கவிருக்கும் நடிகர் பிரபாஸ்!”

Cinema News

“தன்னை விட 22 வயது குறைந்த நடிகையுடன் நடிக்கவிருக்கும் நடிகர் பிரபாஸ்!”

தெலுங்கு சினிமாவில் Rebel Star என்று அழைக்கப்படும் பிரபாஸ், பாகுபலி படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்தார். இந்த படத்துக்கு பின் அவர் நடித்து வரும் ஒவ்வொரு படங்களும் பான் இந்தியா அளவில் கவனத்தை ஈர்தது வருகின்றனர். பிரபாஸின் புதிய படமாக சாலர் உருவாகி வருகிறது.

KGF படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கடந்த வாரம் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அத்துடன் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு கல்கி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தை சீதா ராமம் பட இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கவுள்ளாராம். இதையடுத்து இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோயினாக கலக்கி வரும் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

44 வயதாகும் பிரபாஸை விட 22 வயது குறைவானவர் ஸ்ரீலீலா. ராதே ஷ்யாம் படத்தில் இளம் நடிகையான பூஜா ஹெக்டேவுடன் இணைந்த நடித்த பிரபாஸ், தற்போது மீண்டும் இளம் நடிகையுடன் ஜோடி சேரவுள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top