Connect with us

போலீஸ் அதிகாரியாக நடிப்பது அவ்ளோ சுலபம் அல்ல – பிருந்தா வெப் தொடர் குறித்து நடிகை திரிஷா ஓபன் டாக்..!!

Cinema News

போலீஸ் அதிகாரியாக நடிப்பது அவ்ளோ சுலபம் அல்ல – பிருந்தா வெப் தொடர் குறித்து நடிகை திரிஷா ஓபன் டாக்..!!

பிருந்தா என்ற வெப் தொடர் OTT யில் அறிமுகமும் நடிகை திரிஷா இந்த தொடர் குறித்து மனம் திறந்து பேசியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல OTT தளமான சோனி LIVவில் விரைவில் வெளியாகவுள்ள வெப் தொடர் தான் பிருந்தா . தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை திரிஷா OTTயில் அறிமுகமும் இத்தொடர் ஆகஸ்ட 2 ஆம் தேதி ( நாளை ) வெளியாக உள்ளது.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ள இந்த தொடரில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.

இந்நிலையில் தொடரில் தான் ஏற்று நடித்த கதாபாத்திரம் குறித்து ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய திரிஷா கூறியதாவது :

இத்தொடரை இயக்கிய சூர்யா தனது ஸ்கிரிப்டை படிக்க அனுப்பியிருந்தார், நான் விமானத்தில் இருந்தபோது அதை எடுத்து சில பக்கங்களைப் படிக்க முடிவு செய்தேன். முதல் அத்தியாயத்திலிருந்தே நான் கதைக்குள் ஈர்க்கப்பட்டேன்.

நான் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்தது பெரும் ஈர்ப்பாக இருந்தது. எந்தவொரு கதாபாத்திரமும் ஒரு சவாலே. ஆனால், தனது முன்னணி நடிகரை எவ்வாறு சித்தரிக்க விரும்புகிறார் என்பதில் 100% தெளிவு ஒரு இயக்குநரிடம் இருந்தால் அனைத்தும் சிறப்பாகவே மாறும் என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சோனி LIVயில் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகும் இந்த க்ரைம்-த்ரில்லர் தொடரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறுதிச்சடங்கின்போது அசைந்த குழந்தை - மருத்துவர்களால் ஏற்பட்ட பெருங்குழப்பம்..!!

More in Cinema News

To Top