Connect with us

அர்ஜுன் தாஸுடன் கைக்கோர்க்கும் அதிதி ஷங்கர் – இயக்குநர் யார் தெரியுமா..?

Cinema News

அர்ஜுன் தாஸுடன் கைக்கோர்க்கும் அதிதி ஷங்கர் – இயக்குநர் யார் தெரியுமா..?

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கைதி என்ற படத்தில் மிரளவிக்கும் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . தனது நடிப்பாலும் விதிசயமான குரலாலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ள இவர் தற்போது கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அந்தவகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ரசவாதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையடுத்து இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் குட் நைட், லவ்வர் என்ற சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ், நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அதிதி சங்கர் நடிக்க உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

இளம் பட்டாளங்கள் ஒன்று கூடி நடிக்க இருக்கும் இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் நிலையில், ஹெஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ள இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது கொலை முயற்சி - டிடிவி தினகரன் கடும் கண்டனம்

More in Cinema News

To Top