Connect with us

11 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் திரைக்கும் வரும் விஷாலின் மதகதராஜா திரைப்படம்..!!

Cinema News

11 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் திரைக்கும் வரும் விஷாலின் மதகதராஜா திரைப்படம்..!!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த மதகதராஜா திரைப்படம் 11 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும் நல்ல நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் தான் மதகதராஜா.

விஷால் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர் . ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவான இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டே ரிலீஸுக்கு தயாரான இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் தள்ளிப்போனது . அப்போது தள்ளிப்போன இப்படம் இன்று வரை திரையரங்குங்களில் வெளியாகாமமல் உள்ளது .

இந்நிலையில் தற்போது 11 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் மதகதராஜா திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து தற்போது அவர்களே மறந்துபோன இப்படம் பல போராட்டங்களுக்கு பின் திரைக்கு வர உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று துளிர்விட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கடும் கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட அதிர்ச்சி பதிவு - என்ன மேட்டர் தெரியுமா..?

More in Cinema News

To Top