Connect with us

தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு – லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

Cinema News

தொலைந்த காட்சிகள் கிடைச்சிருச்சு – லால் சலாம் ஒடிடி ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினி அறிவிப்பு..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான லால் சலாம் படத்தின் OTT ரிலீஸில் தரமான சர்ப்ரைஸ் இருப்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் லைக்கா நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படமே லால் சலாம் .

விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க மொய்தீன் பாய் எனும் கேமியோ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரித்தான ஸ்டைலில் கெத்தாக நடித்திருந்தார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குங்களில் கோலாகலமாக வெளியானது.

இருப்பினும் சில பல காட்சிகள் தொலைந்ததன் காரணமாக இப்படம் நினைத்த அளவிற்கு வரமால் கலவையான விமரணங்களை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது :

லால் சலாம்’ படத்தின் Director’s Cut விரைவில் ஓடிடியில் வெளியிடப்படும். தொலைந்துபோன சில காட்சிகளை மீட்டு இதில் சேர்த்துள்ளோம். திரையரங்கில் வெளியான வெர்ஷனைவிட இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். இதுதான் நான் எழுதிய கதைப்படி இருக்கவேண்டிய படமாகும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top