Connect with us

படு மாஸ் சாரே – புத்தம் புது லுக்கில் அசத்தும் அஜித்..!!

Cinema News

படு மாஸ் சாரே – புத்தம் புது லுக்கில் அசத்தும் அஜித்..!!

உலகம் முழுவதும் கோடான கோடி ரசிகர்களை வைத்துள்ள நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாக இருக்கும் Good Bad Ugly படத்திற்காக நடிகர் அஜித்தை புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

அஜித் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அண்மையில் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள Good Bad Ugly படத்திற்காக தயாராகி வருகிறார்.

இளைய திலகம் நடிகர் பிரபுவின் மருமகனாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் முரட்டு தனமான மெட்டுக்களை மெல்ல மெல்ல போட்டு வருகிறார் .

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிமாநிலங்களில் சத்தமின்றி நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக தொடங்கி நடைபெற உள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

கோட் சூட் போட்டு செம ஸ்டைலா கெத்தாக இருக்கும் புகைப்படம் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2025 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே நியமனம்..!!

More in Cinema News

To Top