Connect with us

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை – பிரதமர் மோடிக்கு எமோஷனல் ட்வீட் போட்ட அண்ணாமலை

Featured

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை – பிரதமர் மோடிக்கு எமோஷனல் ட்வீட் போட்ட அண்ணாமலை

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ள நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எமோஷனல் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறிருப்பதாவது :

“பிரான்ஸ் நாட்டில் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன” என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் எமோஷனலான ட்வீட் ஒன்றை போட்டுள்ளர் அந்த பதிவில் அவர் கூறிருப்பதாவது :

“நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோட் அவர்கள், கடந்த ஜூலை மாதம் தமது பிரான்ஸ் நாட்டு பயணத்தின்போது, செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்திருந்தார். இன்று, நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், நமது தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்புக்கும், திருக்குறளின் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அவர் எடுத்துள்ள முயற்சிகளுக்கும், பணிகளுக்கும் சான்றாக, செர்ஜி நகரில் நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கிறது.

நமது தமிழ் மொழியின் பெருமையை உலகெங்கும் பரப்பியுள்ள பாரதப் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இது எளிதான விஷயமல்ல - 'அமரன்' படக்குழுவுக்கு இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பாராட்டு..!!

More in Featured

To Top