Connect with us

இவங்களும் இருக்காங்களா..? ‘சர்தார் 2’ படத்தில் இணைந்த இன்னொரு நடிகை..!!

Cinema News

இவங்களும் இருக்காங்களா..? ‘சர்தார் 2’ படத்தில் இணைந்த இன்னொரு நடிகை..!!

நடிகர் கார்த்தியின் நடிப்பில் சர்தார்- 2 திரைப்படம் பூஜையுடன் தொடங்கி உள்ள நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் கடைக்குட்டி சிங்கமாக வலம் வரும் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் . பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான இப்படம் எதிர்பார்ப்பை மிஞ்சி அசத்தலான வெற்றி பெற்றதுடன் வசூல் சாதனையும் படைத்தது .

இந்நிலையில் இப்படத்தின் 2 ஆம் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்கப்போகும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகளை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது .

முதல் பாகத்தை இரண்டாம் பாகத்திலும் 3 கதாநாயகிகள் இருப்பார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் 2 கதாநாயகிகளின் பெயர்களை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிக்க போகும் 3 ஆவது கதாநாயகியின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது .

அதன்படி இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் நடிகை ஆஷிகா ரங்கநாத் ஏற்கனவே இணைந்துள்ள நிலையில் தற்போது ரெஜிஷா விஜயன் இப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளதாக படக்குழு சிறப்பு போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தேதி குறிச்சாச்சு மக்களே - சென்னையில் நடைபெறுகிறது வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

More in Cinema News

To Top