Connect with us

கோட் ட்ரைலர் எப்போது தெரியுமா..? முக்கிய அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி..!!

Cinema News

கோட் ட்ரைலர் எப்போது தெரியுமா..? முக்கிய அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி..!!

தளபதியின் அசத்தலான விறுவிறுப்பாக உருவாகி வரும் கோட் படத்தின் ட்ரைலர் குறித்த முக்கிய அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜயின் மிடுக்கான நடிப்பில் தற்போது வேற லெவலில் சிறப்பாக தரமாக உருவாகி வரும் திரைப்படமே THE GOAT .

AGS நிறுவனம் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் பல நாடுகளில் விறுவிறுவிப்பாக உருவாகி வரும் இப்படத்தை மாநாடு , மங்காத்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருக்கும் நேரத்தில் கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா கூறியதாவது :

‘ஒரு அற்புதமான ட்ரைலரை நாங்கள் தயார் செய்து வருகிறோம். அதனால் அமைதியாக இருந்து, எங்களுக்கு இரண்டு நாட்கள் கொடுங்கள்.’

‘இது பற்றி proper அப்டேட் நாளைக்கு வரும் ‘ என அர்ச்சனா கல்பாத்தி கூறி இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top