Connect with us

“அவரும் குழம்பி நம்மையும் குழப்பி உள்ளார்! ஆர்யா நடிப்பில் வெளியான The Village வெப் சீரிஸை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!”

Cinema News

“அவரும் குழம்பி நம்மையும் குழப்பி உள்ளார்! ஆர்யா நடிப்பில் வெளியான The Village வெப் சீரிஸை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்!”

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யாவுக்கு எந்தவொரு வெற்றிப் படமும் அமையவில்லை. OTT பக்கம் ஒதுங்கியவருக்கும் அங்கேயும் எதுவும் வொர்க்கவுட் ஆகவில்லை என விமர்சித்துள்ளார். அமேசான் பிரைம் OTT தளத்தில் நவம்பர் 24ம் தேதி மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்த The Village வெப்சீரிஸ் வெளியானது.

ஒட்டுமொத்தமாக 3.30 மணி நேரம் கொண்ட இந்த கதை 6 எபிசோடுகளாக வெளியான நிலையில், ரசிகர்களை பெரிதாக கவர தவறியிருப்பதாக ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் விமர்சித்து வருகின்றனர்.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா நடித்த அரண்மனை 3, கேப்டன், வசந்த முல்லை, காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் என வரிசையாக படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், OTTயில் அவர் நடித்த The Village வெப்சீரிஸும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்றே தெரிகிறது.

பேய் படமா? வேற்று கிரகவாசி படமா? என்றே தெரியாத அளவுக்கு கேப்டன் படத்தை போலவே இந்த வெப்சீரிஸையும் எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் என்றும் ஹாலிவுட்டில் பார்த்த சா, ப்ரீட், பிரடேட்டர், நரபலி உள்ளிட்ட அத்தனை கதைகளையும் மிக்ஸியில் போட்டு அரைத்து அவரும் குழப்பி நம்மையும் குழப்பி உள்ளார் என்றும் வெப்சீரிஸ் ரசிக்கும் படியாக இல்லை என்றும் விமானத்தில் ஏற்ற சீட் பெல்ட் எல்லாம் போட்டு கடைசியில் டேக் ஆஃப் செய்யாமல், அதே இடத்தில் இறக்கி விட்டதை போல சப்புன்னு இருப்பதாக விமர்சித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் அஜித் - ஷாலினி வெளியிட்ட தரமான போட்டோஸ்..!!

More in Cinema News

To Top