Connect with us

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது கொலை முயற்சி – டிடிவி தினகரன் கடும் கண்டனம்

Featured

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது கொலை முயற்சி – டிடிவி தினகரன் கடும் கண்டனம்

அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

அரியலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி – சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுப்பதே ஒரே தீர்வாக அமையும்.

அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுக்க முற்பட்ட காவலர்கள் மீது லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளை தொடர்பான பொதுமக்களின் புகார்களை அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, மணல் கொள்ளையை தடுக்க முயலும் காவலர்களையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ திரு.லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிவகங்கை, அரியலூர் என பல்வேறு மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, காவலர்களை லாரி ஏற்றி கொலை செய்ய முயன்ற மணல் கடத்தல் கும்பலை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, இனிவரும் காலங்களில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஸ்வரூபம் எடுக்கும் அன்னபூர்ணா விவகாரம் - இதைவிட சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்? கருணாஸ் காட்டம்..!!

More in Featured

To Top