Connect with us

“தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழு! எதற்கு தெரியுமா?!”

Cinema News

“தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழு! எதற்கு தெரியுமா?!”

ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ விஜய் நடித்த ’லியோ’ படங்களுக்கு கூட கிடைக்காத சலுகை தற்போது சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ உட்பட பொங்கல் திரைப்படங்களுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து ‘அயலான்’ தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் வெளியாகும் மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு கூட அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ’ஜெயிலர்’, ’லியோ’ உட்பட அனைத்து படங்களும் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்பட்டது.

’லியோ’ தயாரிப்பாளர் இது குறித்து நீதிமன்றம் சென்ற போதிலும் கூட மொத்தம் 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதி கிடைத்தது என்பதும் முதல் காட்சி 9 மணிக்கு திரையிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ‘அயலான்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ‘அயலான்’ உட்பட பொங்கல் திரைப்படங்கள் அதிகாலை காட்சி திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அரசின் முறையான அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஓடிடியில் வெளியானது விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படம்..!!

More in Cinema News

To Top